காதலியுடன் தாய்லாந்து பயணம் மனைவியிடம் சிக்காமல் இருக்க பாஸ்ப்போர்ட்டை கிழித்த நபர் கைது !

புனே அவை சேர்ந்த நபர் ஒருவர் தனது பாஸ்ப்போர்ட்டிலிருந்து குறிப்பிட்ட பக்கங்களை கிழித்ததற்காக மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்தர்ஷி யாதவ் (32) என்ற அந்த நபர் வியாழன் அன்று மாலத்தீவுக்கு விமானத்தில் ஏற முயன்றபொழுது அங்குள்ள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.இவர் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதற்கு முன், தனது பயண வரலாற்றை மனைவியிடமிருந்து மறைக்க 2019 ஆம் ஆண்டில் பயணம் செய்த குறிப்பிட்ட பக்கங்களை கிழித்துள்ளார்.

யாதவ் தாய்லாந்திற்கு சென்ற தனது பயண வரலாற்றை மறைக்க தனது பாஸ்ப்போர்ட்டில் குறைந்தது 10 பக்கங்களை கிழித்துள்ளார் என்று குற்றம்ச்சாட்டப்பட்டு எஃப்ஐஆர் பதியப்பட்டது.அதன் பின்னர் அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்  பின்னர் அவர் ரூ. 25,000 ஜாமீன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment