20% தீபாவளி போனஸ் வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்.!

தீபாவளி போனஸ் 20 சதவீதம் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பைபாஸ் ரோட்டிலுள்ள மண்டல அலுவலகத்தை 1000 க்கும் மேற்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் முற்றுகையிட்டனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு  கடந்த 13 ஆண்டுகளாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா காரணமாக 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கோவமடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள், வழக்கம் போல் 20 சதவீத போனஸ் தொகையை வழங்கக் கோரி, மதுரை போக்குவரத்து தலைமையகம் முன்பு முபோராட்டத்தில் .

இந்நிலையில், தொழிலாளர்களின் ஸ்டிரைக்கால் நேற்று மதுரையில் 75 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால், தீபாவளி நேரத்தில் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.