போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நவம்பர் 11ஆம் தேதி முதல், சென்னையில் உள்ள 5 இடங்களில் இருந்து 14,757  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய நிதிநிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் என்று தெரிவித்ததோடு போராட்டம் நடத்துவதாக இருந்தால் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வரத்தை நடத்த தயார் என்று கூறினார்.

அது மட்டுமில்லாமல், பேருந்துகள் இயங்காத காலத்தில் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 50 % சம்பளமே கொடுக்கப்பட்ட நிலையில், முதல்வர் பழனிசாமியின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் முழு சம்பளம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.