இன்றைய (31.08.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்:
இன்று செய்ய வேண்டிய காரியங்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம்.
ரிஷபம்:
உங்கள் செயல்களை உறுதியுடன் மேற்கொள்வதற்கு மிகுந்த பொறுமை அவசியம்.செயல்களில் தாமதம் நேரலாம்.
மிதுனம்:
இன்று பலன்கள் கலந்து காணப்படும். அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம் மற்றும் நல்லது.
கடகம் :
உங்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை விரைந்து எடுப்பதற்கு உங்கள் மனமும் விரைவாகச் செயல்படும்.
சிம்மம்:
உங்கள்அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கன்னி:
ஆன்மீகச் செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி காணலாம். முன்னேறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
துலாம்:
நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். நேர்மறையான அணுகுமுறை அவசியம். தியானம் மற்றம் பிரார்த்தனை உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும்.
விருச்சிகம்:
இன்றைய நாள் சமநிலையுடன் காணப்படும். நீங்கள் நினைத்ததை அடைவதற்கு குறைந்த அளவு முயற்சியே போதுமானதாக இருக்கும்.
தனுசு:
இன்றைய நாள் அபாரமான நாளாக இருக்கும். உங்கள் தொடர்பாடல் திறமை மூலமாக உங்கள் பிரியமானவர்களின் இதயத்தில் இடம் பிடிப்பீர்கள்.
மகரம்:
எதையோ இழந்தது போன்று உணர்வீர்கள். சோர்வுடன் காணப்படுவீர்கள். அதனை தவிர்த்து சுறுசுறுப்புடனும் நேர்மறை எண்ணத்துடனும் இருக்க முயலுங்கள்.
கும்பம்:
எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வெற்றி காண்பது கடினம்.
மீனம்:
இன்றைய நாள் துடிப்புடன் காணப்படும். வெற்றிக்கான முயற்சி செய்வீர்கள். திடமான சிந்தனையும் செயலாக்கமும் காணப்படும்.