இன்றைய (27.11.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்று பதட்டமான நாளாக இருக்கும். உத்தியோக பணிச்சுமை அதிகமாக இருப்பதால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் மனைவியிடம் உங்களின் அகந்தை குணத்தை காட்டுவீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படும். தாயின் உடல்நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

ரிஷபம் : இன்றைய தினத்தில் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். இது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உத்தியோகத்தில் வெற்றியடைய அதிகமாக உழைக்க வேண்டும். உங்களது மனைவியுடன் உணர்ச்சிவசப்பட்டு பேச நேரும். அதனால் சற்று உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். இன்று பணவரவு குறைவாக ஏற்படும். மனஉளைச்சல் காரணமாக தோள்களில் வலி ஏற்படும்.

மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமையும். இன்று உத்தியோக பணிகளை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். உங்கள் மனைவியிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். மனவலிமையால் இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

கடகம் : இன்று உங்களுக்கு அதிக சிந்தனை ஏற்படும் அதனால் மனதை ஒருநிலைப்படுத்தி வைத்திருங்கள். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளில் தவறு செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் மனைவியிடம் கோபம் கொள்வீர்கள். கவனக்குறைவால் பண இழப்பு நேரலாம். செரிமான பாதிப்பு ஏற்படும்.

சிம்மம் : இன்று தெளிந்த மனதுடன் இருந்தால் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் பொறுமை சோதிக்கப்படும். உத்தியோக வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். காதலுக்கு இன்று ஏற்ற நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புண்டு.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாதென்பதால் தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். உத்தியோக பணிகள் சற்று அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் பொறுமை இழந்து பேச நேரலாம் அதனால் புரிதலோடு பழக வேண்டும். இன்றைய நாளில் செலவு மிகுந்து காணப்படும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் : இன்று மகிழ்ச்சியளிக்கும் விதமான முன்னேற்றங்கள் காணப்படும். உத்தியோக வேலையில் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். இன்று உங்கள் மனைவியிடத்தில் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். வருமானம் அதிகமாக ஏற்படும்.  இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று வளர்ச்சி மற்றும் முன்னேற்ற நாளாக அமையும். இந்நாளில் உங்கள் லட்சியங்களை அடைய சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் மனைவியிடத்தில் நம்பிக்கையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.

தனுசு : இன்றைய நாளில் நீங்கள் நடக்கும் விஷயங்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய மனிதர்களின் தொடர்பு மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோக வேலை சற்று அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு சுமாராக காணப்படும். தூக்கமின்மையால் தலைவலி ஏற்படும்.

மகரம் : இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். உத்தியோக பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் மனதில் ஏற்படும் குழப்பமான எண்ணங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்வீர்கள். பண இழப்பு ஏற்படலாம். தோல் தொடர்பான அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்று உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் சேர்ந்து அமையும். உத்தியோக வேலையில் உங்களின் தனித்திறமைக்கான பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவு ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

மீனம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோக இடங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று பணவரவு சாதகமாக இருப்பதால் சேமிக்க முடியும். இன்று உங்களின் ஆற்றல் காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Published by
Sharmi

Recent Posts

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை… 

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

22 minutes ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

41 minutes ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

2 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

2 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

2 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

13 hours ago