இன்றைய (27.09.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்:
இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். எனவே திட்டமிட்ட அணுகுமுறை தேவை. விஷயங்களை எளிதாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
ரிஷபம்:
இன்று உங்களின் நெகிழ்வான அணுகுமுறை காரணமாக நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம். சரியான தொடர்பாடல் பயனுள்ளதாகவும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.
மிதுனம்:
தொழில் சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறை தேவை. முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.
கடகம் :
இன்று அமைதியான சௌகரியமான நாள். திருப்தியான எண்ணங்களும் எதையோ பெரிதாக சாதித்தது போன்ற உணர்வும் உங்களிடம் காணப்படும்.
சிம்மம்:
இன்று சாதகமான நாள். புதிய தொடர்புகள் இன்று உங்களுக்கு மிகவும் பயன் தருவதாக அமையும். எண்ணங்கள் பூர்த்தியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கன்னி:
இன்று மகிழ்ச்சியாகவும் ஆற்றலுடனும் இருப்பது உங்களுக்கு நல்லது. எதையும் எதிர்பாராமல் செயலாற்றுங்கள்.
துலாம்:
இன்று சாதகமான அல்லது மகிழ்ச்சியான நாளாக அமையாது. பணிகளில் பொறுப்புகளை ஏற்க நேரிடும். பணியில் கவனம் தேவை.
விருச்சிகம்:
இன்று மிகவும் துடிப்பான நாள். இன்று வெற்றிக்கு அடிகோலும் நாள். சுய வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுப்பீர்கள்.
தனுசு:
எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். விஷயங்களை வேறு விதமாக அணுகுவது நல்லது. பயனுள்ள முடிவுகளை நீங்கள்எடுக்கலாம்.
மகரம்:
இன்று நல்ல பலன்களைக் காண தொழில்சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறை தேவை. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் நலம்.
கும்பம்:
இன்று மிதமான பலன்களே கிடைக்கும் நாள். இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக அமைய அமைதியாக இருக்க வேண்டும்
மீனம்:
உங்களின் இனிமையான தொடர்பாடல் மூலம் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகளை இன்று முயல்வீர்கள்.