இன்றைய (25.12.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம் : இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிகள் அதிகமாக இருந்தாலும் நம்மால் இதை செய்ய முடியும் என்று நம்புங்கள். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு குறைவாக இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்படும்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். மனைவியிடம் மோதல் ஏற்படும். இன்று பணவரவு சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எளிமையாக பணிகளை செய்வீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். இன்று உத்தியோக இடத்தில் தவறுகள் ஏற்படலாம். துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு குறைவாக காணப்படும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
சிம்மம் : இன்று உங்கள் சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரிடும். உத்தியோகத்தில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். கால் வலி மற்றும் முதுகு வலி ஏற்படலாம்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோக வேலையில் பணிச்சுமை காணப்படும். உங்கள் மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். தலைவலி ஏற்படலாம்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றமான நாள். உத்தியோக இடத்தில் வெற்றி கிட்டும். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு போதுமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம் : இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் பாராட்டை பெறுவீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமானதாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். இன்று உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்கவும். இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படும்.
மகரம் : இன்று ஆன்மீக பிரார்த்தனைகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோக வேலையில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி, கால் வலி ஏற்படும்.
கும்பம் : இன்று சிறப்பான நாளாக அமையும் என்பதால் உங்களது சுய வளர்ச்சிகளை துவங்கலாம். உத்தியோக வேலையில் வளர்ச்சி கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மீனம் : இன்றைய நாளில் உங்களது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சுமுமாக வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். இன்று பண வரவு அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.