மேஷம் : இன்று நீங்கள் உங்களின் மறைந்திருக்கும் ஆற்றலை உணர்ந்து செயல்படுவீர்கள். உங்களது உத்தியோக வேலையில் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் மனைவியுடன் புரிதல் கிட்டும். இன்று பணவரவு திருப்தியாக இருக்கும். தேவையான நேரத்தில் பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் : இன்றைய தினத்தில் கவனத்துடன் செய்லபடுவது அவசியம். உத்தியோக பணிகள் இன்று சிறப்பாக அமையாது. உங்களது மனைவியுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. செலவுகள் வரவை காட்டிலும் அதிகமாக ஏற்படும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம் : இன்றைய தினம் பதட்டம் நிறைந்த நாளாக இருப்பதால் பொறுமையுடன் இருங்கள். இன்று உத்தியோக பணிகள் சற்று அதிகமாக இருக்கும். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. செலவினங்கள் அதிகமாக ஏற்படும். தாயின் உடல்நல பாதிப்பு காரணமாக செலவு செய்ய நேரிடும்.
கடகம் : இன்று வீட்டில் நடக்கவிருக்கும் விசேஷங்களை தள்ளி போடுவது நல்லது. இன்று உங்களுடைய உத்தியோக பணிகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். மனதில் சில குழப்பங்கள் ஏற்படும். இன்று பயணத்தின் போது பண இழப்பு நேர வாய்ப்புண்டு. கால் வலி ஏற்படலாம்.
சிம்மம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். நீங்கள் சிறு முயற்சியிலேயே வெற்றியை அடைவீர்கள். உத்தியோக வேலையில் அனுசரித்து செல்லுங்கள். காதலுக்கு இன்று ஏற்ற நாளாக அமையும். பணவரவு இன்று அதிகரித்து காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
கன்னி : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையும் என்பதால் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உத்தியோக பணியில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் மனைவியிடம் மனம் விட்டு பேசுவீர்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்றைய நாளில் பணவரவு மிகுந்து காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும்.
துலாம் : இன்று மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது அவசியம். உத்தியோக வேலை இன்று சிறப்பாக அமையாது. இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். உடற்பயிற்சி செய்வது மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று பலன்கள் கலந்து இருப்பதால், பொறுமை மிகவும் அவசியம். பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். மனதில் குழப்பத்துடன் இருப்பதால் உங்கள் துணையிடம் புரிந்துணர்வு குறைந்து இருக்கும். பணவரவு குறைவாக ஏற்படும். அதிக சிந்தனை காரணமாக உடலில் பாதிப்பு ஏற்படும்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் எதிர்பாத்த வெற்றி கிட்டும். இன்று காதலுக்கு ஏற்ற நாளாக அமையும். பணவரவு அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கிய பாதிப்புகள் இருக்காது.
மகரம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாளாக அமையும். உத்தியோக பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் மனதில் ஏற்படும் நம்பிக்கையான எண்ணங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கும்பம் : இன்று நன்மை தீமை இரண்டும் அமையும் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உத்தியோக வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். காதலுக்கு இன்று ஏற்ற நாள் இல்லை. பணவரவு திருப்திகரமாக இருக்காது. கண்களில் எரிச்சல் ஏற்படும்.
மீனம் : உங்கள் முடிவுகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உத்தியோக இடங்களில் கவனமாக செயல்படுங்கள். இன்று கூடுதல் செலவினங்கள் ஏற்படும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…