இன்றைய (25.08.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்:
இன்று வெற்றிகரமான பலன்கள் காண உறுதியும் திட்டமிடலும் அவசியம். பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும் நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
மிதுனம்:
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகலாம் நீங்கள் சமநிலையோடு காணப்படுவீர்கள்.
கடகம் :
இன்று பயணம் செய்வதில் முனைந்து இருப்பீர்கள். உங்களைச் சுற்றி மாற்றங்கள் ஏற்படுவதை உணர்வீர்கள்.
சிம்மம்:
இன்று நற்பலன் காண நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் பயனுள்ளதாக இருக்கும். இறை மந்திரம் மற்றும் ஸ்லோகங்கள் கூறுவதன் மூலம் நீங்கள் திருப்தியாக உணர்வீர்கள்.
கன்னி:
இன்று நீங்கள் அதிக முயற்சி எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.
துலாம்:
இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். மறக்கமுடியாத தருணங்களை அனுபவிப்பீர்கள். சவாலான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.
விருச்சிகம்:
முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் அல்ல. இன்று உங்கள் செயல்களில் கவனம் கொள்ள வேண்டிய நாள்.
தனுசு:
இன்று முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். உங்கள் செயல்களில் சிறிது கவனம் தேவை.
மகரம்:
இன்று உங்களுக்கு சீரான பலன்கள் கிடைக்கும் நாள்.இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள்.
கும்பம்:
இன்று பதட்டமான மன நிலையில் காணப்படுவீர்கள். அதனால் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைப்பது கடினம்.
மீனம்:
இன்று நன்மை தீமை இரண்டும் கலந்த நிச்சயமற்ற பலன்கள் காணப்படும். எல்லா விஷயங்களிலும் பொறுமை மேற்கொள்வதன் மூலம் வெற்றி காணலாம்.