இன்றைய (23.09.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்:
இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும்.
ரிஷபம்:
இன்று நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும்.
மிதுனம்:
இன்று உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்துவீர்கள்.
கடகம் :
இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதியை உணர்வீர்கள்.
சிம்மம்:
இன்று அதிருப்தியான நிலை காணப்படும். அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.
கன்னி:
இன்று உங்களுக்கு சாதகமான நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
துலாம்:
இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் உங்கள் உணர்வுகளையும் உணர்சிகளையும் கட்டுபடுத்த வேண்டும். இன்று நன்மையான பலன்கள் காண நீங்கள் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
தனுசு:
இன்று வளர்ச்சி நோக்கி செயலாற்ற உகந்த நாள். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைய நீங்கள் உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமையை பயன்படுத்துவீர்கள்.
மகரம்:
இன்று மிகவும் துடிப்பான நாளாக அமையும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களின் உறுதியான போக்கு மற்றும் மன உறுதி மூலம் வெற்றி காண்பீர்கள்.
கும்பம்:
இன்று முடிவுகள் எடுக்கும் போது அமைதியும் கட்டுப்பாடும் தேவை. எந்த செயலையும் செய்வதற்கு முன் நன்றாக யோசிக்க வேண்டும்.
மீனம்:
சில குடும்ப பிரச்சினை காரணமாக கவலையுடன் காணப்படுவீர்கள்.எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் சிறப்பாக செயலாற்றலாம்.