மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு மிதமான நாளாக அமையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ரிஷபம் : இன்றைய நாளில் முன்னுரிமை உடைய செயல்களில் கவனம் செலுத்துங்கள். உத்தியோக வேலை இன்று திருப்திகரமாக இருக்கும். இன்று உறவினர் மூலம் நற்செய்தி கிட்டும். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சற்று மிதமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு பிரச்சனை ஏற்படலாம். துணையிடம் உணர்ச்சிவசப்படாதீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம் : இன்று நற்பலன்கள் கிடைக்க ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். இன்று உத்தியோக இடத்தில் சாதகமான சூழல் இல்லை. தவறுகள் ஏற்படலாம். துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக காணப்படும். செரிமான கோளாறு, தோள் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிம்மம் : இன்று உங்கள் முடிவுகளை கவனமாக திட்டமிட்டு செயலாற்றுவது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்ய முடியாது. உங்கள் மனைவிடத்தில் மகிழ்ச்சியாக பேசவும். பணவரவு திருப்திகரமாக இருக்காது. தொண்டை பாதிப்பு ஏற்படலாம்.
கன்னி : இன்றைய நாளில் உங்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சாதகமாக அமையும். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். உத்தியோக இடத்தில் பணிகள் அதிகமாக இருந்தாலும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம் : இன்று உங்கள் செயல்களை கவனமாக செய்ய வேண்டும். நம்பிக்கை இழக்க வேண்டாம். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். இன்று எளிதாக சோர்வடைவீர்கள்.
தனுசு : இன்று நீங்கள் மிதமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் பதட்டமான நிலை ஏற்படும். இன்று உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்கவும். இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். பதட்டத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
மகரம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாள். உத்தியோக இடங்களில் சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் துணையிடம் நேர்மையாக பேசுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
கும்பம் : இன்று உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். உத்தியோக வேலையில் கடின உழைப்பிற்கு பலன் கிட்டும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு அதிகமாக இருக்கும். சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.
மீனம் : இன்றைய நாள் சுமாராக அமையும். உத்தியோக வேலையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும். இன்று பண வரவு குறைவாக இருக்கும். கண் பாதிப்பு ஏற்படலாம்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…