இன்றைய (22.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம் :  இன்றைய நாள் உங்களுக்கு மிதமான நாளாக அமையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ரிஷபம் : இன்றைய நாளில் முன்னுரிமை உடைய செயல்களில் கவனம் செலுத்துங்கள். உத்தியோக வேலை இன்று திருப்திகரமாக இருக்கும். இன்று உறவினர் மூலம் நற்செய்தி கிட்டும். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சற்று மிதமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு பிரச்சனை ஏற்படலாம். துணையிடம் உணர்ச்சிவசப்படாதீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம் : இன்று நற்பலன்கள் கிடைக்க ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். இன்று உத்தியோக இடத்தில் சாதகமான சூழல் இல்லை. தவறுகள் ஏற்படலாம். துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக காணப்படும். செரிமான கோளாறு, தோள் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம் : இன்று உங்கள் முடிவுகளை கவனமாக திட்டமிட்டு செயலாற்றுவது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்ய முடியாது. உங்கள் மனைவிடத்தில் மகிழ்ச்சியாக பேசவும். பணவரவு திருப்திகரமாக இருக்காது. தொண்டை பாதிப்பு ஏற்படலாம்.

கன்னி : இன்றைய நாளில் உங்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சாதகமாக அமையும். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். உத்தியோக இடத்தில் பணிகள் அதிகமாக இருந்தாலும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம் : இன்று உங்கள் செயல்களை கவனமாக செய்ய வேண்டும். நம்பிக்கை இழக்க வேண்டாம். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். இன்று எளிதாக சோர்வடைவீர்கள்.

தனுசு : இன்று நீங்கள் மிதமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் பதட்டமான நிலை ஏற்படும். இன்று உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்கவும்.  இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். பதட்டத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

மகரம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாள். உத்தியோக இடங்களில் சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் துணையிடம் நேர்மையாக பேசுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.

கும்பம் : இன்று உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். உத்தியோக வேலையில் கடின உழைப்பிற்கு பலன் கிட்டும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு அதிகமாக இருக்கும். சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

மீனம் : இன்றைய நாள் சுமாராக அமையும். உத்தியோக வேலையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும். இன்று பண வரவு குறைவாக இருக்கும். கண் பாதிப்பு ஏற்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்