இன்றைய (21.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம் :  இன்றைய நாள் உங்களுக்கு ஏற்ற இறங்கங்களுடன் அமையும். உத்தியோகத்தில் வெற்றி காண்பீர்கள். உங்கள் மனைவியிடம் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று பண வரவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ரிஷபம் : இன்றைய நாளில் முன்னுரிமை உடைய செயல்களில் கவனம் செலுத்துங்கள். உத்தியோக வேலையில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு உற்சாகம் கொடுக்கும். இன்று உறவினர் மூலம் நற்செய்தி கிட்டும். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்கள் திறமைக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் வெற்றி காண்பீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம் : இன்று அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளியுங்கள். இன்று உத்தியோக இடத்தில் சாதகமான சூழல் இல்லை. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக காணப்படும். ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம் : இன்று உங்கள் முடிவுகளை கவனமாக திட்டமிட்டு செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் மனைவிடத்தில் மகிழ்ச்சியாக பேசவும். பணவரவு திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

கன்னி : இன்றைய நாளில் உங்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சாதகமாக அமையும். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். உத்தியோக இடத்தில் பணிகள் அதிகமாக இருந்தாலும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணத்தை கவனமாக கையாளுங்கள். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

தனுசு : இன்று நீங்கள் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக வேலையில் பதவி உயர்வு கிட்டும். இன்று உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க பாருங்கள். இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

மகரம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாள். உத்தியோக இடங்களில் சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் துணையிடம் நேர்மையாக பேசுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். கால் மற்றும் தொடை வலி இருக்கும்.

கும்பம் : இன்று உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். உத்தியோக வேலையில் கடின உழைப்பிற்கு பலன் கிட்டும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம் : இன்றைய நாளில் விவேகத்துடன் யோசித்து செயல்பட வேண்டும். உத்தியோக வேலையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rajat patidar
russia ukraine war Donald Trump
PM Modi USA Visit
lyca vidamuyarchi
gold price
ceasefire in J&K