மேஷம் : இன்று உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும் நாள். உங்கள் உத்தியோக பணிகளை மகிழ்ச்சியாக செய்வீர்கள். நீங்கள் உங்கள் மனைவியை நன்கு புரிந்து கொள்வீர்கள். இன்று உங்களது உடல் ஆரோக்கியத்துடன் காணப்படும்.
ரிஷபம் : உங்கள் பேச்சாற்றலால் சாதனை படைப்பீர்கள். உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வேலை கிடைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. உங்கள் சேமிப்பு அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.
மிதுனம் : இன்றைய நாள் சற்று தொய்வாக காணப்படும். உங்கள் செயல்கள் அனைத்தும் புத்திசாலித்தனத்துடன் செய்து முடிக்க வேண்டும். இன்று நீங்கள் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் கவனம் தேவை. இன்று பூர்வீகச்சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கடகம் : இன்றைய நாள் சற்று சிரமம் நிறைந்து காணப்படும். ஆழ்ந்த தூக்கத்திற்கு இன்று வாய்ப்பில்லை. குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். இன்று பணியில் தவறுகள் நேர வாய்ப்பிருப்பதால் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும். செலவினங்கள் அதிகரிப்பதால் மனதிற்கு கவலையை அளிக்கும்.
சிம்மம் : இன்று தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். இன்று நீங்கள் உறுதியையும் வலிமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் பணிகளை நிறைவேற்றுவதற்கு ஒரு சில தாமதங்கள் ஏற்படலாம். இன்று மிதமான ஆரோக்கியத்துடன் உடல் காணப்படும்.
கன்னி : இன்று கடுமையான வேலைகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்திற்காக பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். இன்று உங்கள் உடல் வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படும்.
துலாம் : சில தடங்கல்களுக்கு பிறகு நீங்கள் மகிழ்ச்சியுடன் இந்நாளை செலவிடுவீர்கள். உங்கள் உத்தியோக வேலைகளை முடிக்க மிகுந்த தாமதமாகும். தேவையற்ற செலவுகளுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். இன்று கால்களில் வலி ஏற்படலாம்.
விருச்சிகம் : இன்று நீங்கள் தொடர் முயற்சிகள் செய்வீர்கள். உங்களிடம் காணப்படும் மனஉறுதி காரணமாக இன்று உங்களுக்கு அனுகூலமாக அனைத்தும் இருக்கும். ஆசைகள் கூட எளிதில் நிறைவேறும். இன்று அதிக அளவில் பணவரவு ஏற்படும். இன்று உடல் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும்.
தனுசு : உங்கள் செயல்களில் சிறிது மந்தம் ஏற்படும். இன்று எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். அதனால் உங்கள் ஆற்றல் மேலும் குறையும். இன்று உங்கள் சேமிப்பு குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் தேவை.
மகரம் : இன்றைய தினம் உங்களுக்கு சற்று முடக்கமாக அமையும். அதனால் முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுங்கள். இன்று மனஉறுதி இல்லாமல் இருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. இன்று செலவுகள் அதிகரிக்கும். கால்கள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கும்பம் : உங்கள் முன்னேற்றம் குறித்து கவலைகள் ஏற்படும். அதனால் இன்று அதிக கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உத்தியோக வேலைகளில் தவறுகள் ஏற்படலாம். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
மீனம் : இன்றைய நாள் தடைகள் நிறைந்து காணப்படும். அதனால் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உத்தியோக பணிகளைக் கையாள்வது சற்று எளிதாக இருக்காது. அதனால் உங்கள் சௌகரியங்களை இழக்க நேரும். இன்று சேமிப்பிற்கான வாய்ப்பு குறைந்து காணப்படும்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…