இன்றைய (11.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

நீங்கள் நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்:

இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் உங்கள் பிரியமான ஒருவருடன் மோதல் ஏற்படலாம்.

மிதுனம்:

நீங்கள் இன்று விருந்துகளில் கலந்து கொள்ளலாம் . மற்றும் உங்களுக்கு பிரியமானவர்களை உங்கள் வீட்டிற்கு அழைக்க நேரலாம்.

கடகம் :

உங்கள் வாழ்வில் சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் செயல்களை இன்று விரைந்து ஆற்றுவீர்கள்.

சிம்மம்:

உங்கள் அணுகுமுறையில் வன்மையை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். நிறைவேறாத உங்களின் லட்சியங்களுக்காக வருந்த வேண்டாம்.

கன்னி:

உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். இன்று வெற்றி காண்பதற்கு முறையாக திட்டமிட வேண்டியது அவசியம்.

துலாம்:

இன்று நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். எந்தச் செயலிலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். இசை கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.

விருச்சிகம்:

இன்று சம்பவங்களை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வளர்ச்சியை தடுக்கும் எந்த உணர்விற்கும் இடம் கொடுக்கக் கூடாது.

தனுசு:

இன்று நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் உங்கள் லட்சியங்களை அடையலாம். சிறந்த பலனைக் காண இன்று கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகரம்:

இன்று சகஜமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பிறருடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். உங்கள் தொடர்பாடலை கட்டுப்படுத்த வேண்டும்.

கும்பம்:

உங்கள் மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்காவிடில் உங்கள் வளர்ச்சி பாதிக்கும். மதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்:

பிரச்சினை அல்லது மனக் குழப்பம் காரணமாக இன்றைய நாளை அனுபவிக்கும் மனநிலை உங்களிடம் இருக்காது. நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்