இன்றைய (10.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைவதால் உங்களது தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோக பணியில் நல்ல பலன்கள் உண்டு. உங்கள் மனைவியிடம் நல்ல புரிந்துணர்வு காரணமாக மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். இன்று மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உத்தியோகத்தில் இன்று திருப்தி கிட்டும். உங்களது மனைவியை நன்கு புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். பணவரவு தேவைக்கேற்ப அமையும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் குழப்பமான நாளாக அமையும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் அதிக வேலை காணப்படும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். இன்று உங்களுக்கு தொடை வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடகம் : இன்று உங்களுக்கு மந்தமான நாள் என்பதால் முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். இன்று உத்தியோக இடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரும். உங்களது மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். அது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கலாம். செலவுகள் அதிகமாக காணப்படும். கால் வலி அல்லது சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உங்களுக்கு ஆர்வத்தை கொடுக்கும் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். உத்தியோக வேலையில் எளிமையாக வேலையை செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவிடத்தில் நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி : இன்றைய நாளில் உற்சாகமாக நீங்கள் காணப்படுவீர்கள். உத்தியோக வேலையில் எளிமையாக பணியை செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடம் நகைச்சுவை உணர்வோடு பேசுவீர்கள். இன்றைய நாளில் பணவரவு அதிகமாக காணப்படும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. நம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். உத்தியோக இடத்தில் கவனமாக பணிகளை செய்யுங்கள். இன்று உங்கள் மனைவியுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். கண் சார்ந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்று பேச்சாற்றலால் இழுபறியான விஷயங்களை முடித்துவிடுவீர்கள். உறவினர்களிடம் நிதானமாக செயல்படுவது நல்லது. புதிய அறிமுகம் கிடைக்கும். பண வரவு சற்று குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படலாம்.

தனுசு : இன்றைய நாளில் உங்களது இலக்குகளை அடைய ஏற்ற நாள். சாதகமான சூழ்நிலை அமைந்துள்ளது. உத்தியோக வேலையில் உங்களது தலைமை பண்பு வெளிப்படும். இன்று நீங்கள் குடும்பத்தில் நன்கு புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவுகள் அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் காரணமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மகரம் : இன்று உங்களுக்கு  சாதகமான நாளாக இருக்காது. அதனால் முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக இடங்களில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகள் இருக்கும். கால் வலி மற்றும் தொடை வலி காணப்படும்.

கும்பம் : இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். உத்தியோக வேலை சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை என்பதால் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோக வேலையில் மேலதிகாரிகளிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மனைவியிடம் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. கால் வலி ஏற்படலாம்.

Published by
Sharmi

Recent Posts

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

23 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

52 minutes ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…

3 hours ago