இன்றைய (06.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம் :  இன்றைய நாளில் உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவுவதன் மூலம் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உத்தியோக பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் பேசும் பொழுது பொறுமையாக பேசுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தோல் எரிச்சல் ஏற்படலாம்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு நன்மை, தீமை கலந்து காணப்படும். உத்தியோகத்தில் அதிகமாக வேலை இருக்கும். உங்களது மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். நிதிநிலைமை குறைவாக ஏற்படும். கண் எரிச்சல் ஏற்படும்.

மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமைவதால் வெற்றிக்கான திட்டங்களை மேம்படுத்தலாம். இன்று உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் அன்புடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கடகம் : இன்று உங்களுக்கு நம்பிக்கையான நாள் என்பதால் புதிய முயற்சியில் ஈடுபடலாம். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று அதிர்ஷ்டகரமான பணவரவு காணப்படும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிம்மம் : இன்று ஆன்மீக செயல்பாட்டில் ஈடுபடுவதன் மூலம் அமைதி காணப்படும். உத்தியோக வேலையில் சாதகமான சூழ்நிலை அமையாது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடக்கவும். உங்கள் பணத்தை திட்டமிட்டு கையாள வேண்டும். வயிறு தொடர்புள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோக வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் மனைவியிடம் நல்ல புரிந்துணர்வு காணப்படாது. இன்றைய நாளில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியமாக இருக்காது.

துலாம் : இன்றைய நாள் மிகவும் நம்பிக்கையான பலவித நன்மைகளை பெறும் நாள். உத்தியோக இடத்தில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். இன்று உங்கள் மனைவியுடன் நல்ல புரிந்துணர்வு கிட்டும். பண வரவு அதிகளவு ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு இன்பம் நிறைந்த நாள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்கள் தெரிந்து அவற்றை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும். எதிர்பாராத உதவிகள் மூலமாக மாற்றங்கள் உண்டாகும். உங்கள் துணையுடன் மகிழ்வாக இருப்பீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

தனுசு : இன்றைய நாளில் உங்களது இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். இன்று நீங்கள் பொறுமையாக அனுசரித்து குடும்பத்தில் நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். கால் மற்றும் பல் வலி ஏற்படும்.

மகரம் : இன்று உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும். அதனால் தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம். உத்தியோக இடங்களில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்று நீங்கள் உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படுவீர்கள். உங்களின் லட்சியங்களை அடைய முடியும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உத்தியோக வேலை வெற்றிகரமாக இருக்கும். உங்கள் துணையுடன் அன்பாக பழகுவீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மீனம் : இன்று சாதகமான நாளாக இருக்கும் என்பதால் இலக்குகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க இன்று ஏற்ற நாள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது மனஉறுதி காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்