இன்றைய (05.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:
இன்று சிறந்த பலன்கள் காண எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் இருந்தால் மன உளைச்சலின்றி இருக்கலாம்.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு சாதகமான நாள். நற்பலனகள் அதிகமாகக் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.
மிதுனம்:
இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக காணப்படாது. அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது. இன்று வளர்ச்சி மற்றும் பலன்கள் பெருகி காணப்படாது.
கடகம் :
அமைதியான கட்டுப்பாடான அணுகுமுறை இன்று மிகவும் அவசியம். தெய்வீகப் பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு செயல்களில் பங்கு பெறுவது உதவிகரமாக இருக்கும்.
சிம்மம்:
இன்று உங்கள் இலக்குகளை அடைய புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். இன்று செயல்களை யுக்தியுடன் மேற்கொள்ள வேண்டும்.
கன்னி:
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நம்பிக்கையான அணுகுமுறை மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
துலாம்:
இன்று பரந்த நோக்குடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் லட்சியத்தை எளிதாக அடைவீர்கள். உங்களின் நேர்மையான அணுகுமுறை அசாத்தியமான வெற்றியை பெற்றுத் தரும்.
விருச்சிகம்:
இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. அதிக சிந்தனை உங்களை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்த்துவிடுங்கள்.
தனுசு:
இன்று சுமுகமான பலன்கள் கிடைக்காது. திறமையாக திட்டமிட்டால் வெற்றி பெறலாம். சில சமயங்களில் பொறுமை இழப்பீர்கள். அமைதியாக இருக்க முயலுங்கள்.
மகரம்:
இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி காரணமாக செயல்களை எளிதில் முடிப்பீர்கள்.
கும்பம்:
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்றைய செயல்கள் சுமுகமாக நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
மீனம்:
இன்றைய செயல்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதனால் கடினமான சூழ்நிலைகளை கையாள முடியும் அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.