மேஷம் : இன்றைய நாளில் உங்கள் முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளுங்கள். உத்தியோக பணிகளில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது. உங்கள் மனைவியிடம் பேசும் பொழுது கவனமாக பேசுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தூக்கமின்மையால் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.
ரிஷபம் : இன்றைய தினத்தில் எதிர்பாராத நன்மை கிடைக்கும். இலக்கை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகத்தில் உங்களது செயலுக்கு மேல் அதிகாரிகளிடத்தில் பாராட்டை பெறுவீர்கள். உங்களது மனைவியிடம் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக ஏற்படும். மன உறுதி காரணமாக இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமைவதால் வெற்றிக்கான திட்டங்களை மேம்படுத்தலாம். இன்று நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் மகிழ்ச்சியான நாளாக அமையும். இன்று உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் அன்புடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாதென்பதால் சவாலான நாளாக இருக்கும். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதனால் பணிகளை பார்க்கும் பொழுது பொறுமை தேவை. உங்கள் மனைவியிடம் உணர்ச்சிவசப்படாதீர்கள். இன்று செலவு அதிகமாக காணப்படும். பதட்டம் காரணமாக ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
சிம்மம் : இன்று சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் விவேகத்துடன் நடந்து கொள்ளுங்கள். உத்தியோக வேலையில் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடக்கவும். உங்கள் பணத்தை திட்டமிட்டு கையாள வேண்டும். சளித்தொல்லை அல்லது இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். சிறந்த மன ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பிரகாசமான வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
துலாம் : இன்றைய நாளில் பொறுமை மிகவும் அவசியம். உங்கள் லட்சியங்களை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். உத்தியோக இடத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படாது. இன்று உங்கள் மனைவியிடத்தில் சகஜமான அணுகுமுறையில் பழக வேண்டும். பண இழப்பு ஏற்படலாம். கால் வலி மற்றும் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம் : இன்று உங்கள் லட்சியங்களை அடைய பொறுமையும் உறுதியும் தேவை. பணிகள் அதிகம் இருக்கும். உங்கள் மனைவியிடத்தில் உங்களது குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம். அதனால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
தனுசு : இன்றைய நாளில் சிறு சிறு பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். இன்று நீங்கள் பொறுமையாக அனுசரித்து குடும்பத்தில் நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை, இருமல் ஏற்படலாம்.
மகரம் : இன்று உங்களுக்கு ஆற்றலும் உறுதியும் அதிகமாக இருக்கும். உங்கள் திறமைகள் அதிகரிக்கும். உத்தியோக இடங்களில் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம் : இன்று நீங்கள் உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படுவீர்கள். உங்களின் லட்சியங்களை அடைய முடியும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உத்தியோக வேலை வெற்றிகரமாக இருக்கும். உங்கள் துணையுடன் நம்பிக்கை வரும் விதமாக பேச வேண்டும். பணவரவு அதிகமாக ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாதென்பதால் ஆன்மீக ஈடுபாடு மேற்கொள்ளுங்கள். உத்தியோக இடங்களில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணியில் அதிருப்தி ஏற்படலாம். உங்கள் மனைவியிடம் நல்லுறவை தக்கவைக்க அமைதியாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக ஏற்படும். தோள் வலி மற்றும் செரிமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…