ஜிம்பாப்வேயில் விமானப்படை ஹெலிகாப்டர் பயிற்சி நேரத்தில் வயல்வெளியில் தரையிறங்கும் போது வீட்டின் மீது விழுந்ததில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவிலுள்ள ஜிம்பாப்வே எனுமிடத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று இரண்டு விமானிகள் மற்றும் ஒரு தொழில் நுட்ப வல்லுனருடன் பயிற்சி பணியில் இருந்துள்ளது. வயல்வெளியில் தரை இறங்கும் பொழுது திடீரென விமானம் நிலை தடுமாறி ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் மூன்று ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். விமானப்படை அறிக்கையில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தலைநகர் ஹரேராவுக்கு கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய பகுதியான ஆர்க்டராசில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்தது எதிர்பாராத நிகழ்வு என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தக்கூடிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு உள்ளத டன் இந்த ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானங்கள் மிகவும் பழையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாக புதிய விமானம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…