ஒரே நேரத்தில் இரு நோயிடம் சிக்கி தவிக்கும் ஜிம்பாப்வே.! வறுமையில் வாடும் மக்கள்.!

Default Image

அந்நாட்டில் கொரோனாவுடன் சேர்ந்து மலேரியா நோயும் வேகமாக பரவி வருவதால் பட்டினியில் கிடக்கும் அவல நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

ஆப்பிரிக்கா நாடுகளின் ஒன்றான ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இங்கு சுமார் 1.50 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள இந்நாட்டில் தற்போது மலேரியா நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் வரும் ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா நோய் அந்நாட்டை ஒருவழியாக்கும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பின்னர் சில ஆண்டுகள் இதன் தாக்கம் சற்று குறைவாகவும் காணப்படும் என கூறப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் இந்த மலேரியா நோய்க்கு 153 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த நோயால் 1.35 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஒருபக்கம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. அதில் கொரோனா வைரஸ் ஜிம்பாப்வேயையும் அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது. இந்த கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டு, 4 பேர் பலியாகியுள்ளனர். வைரஸின் பரவல் இனிமே வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு கொரோனா குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டின் பிரதமர் எமர்சன் மாங்காக்வா தனது நாட்டில் மார்ச் மாத இறுதியில் 3 வார கால ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருந்தார். இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி முதல் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கை அவர் நீட்டித்து உள்ளார். இதன் காரணமாக ஒரு கோடி மக்கள் வேலையை இழந்து வருமானமின்றி பட்டினியில் கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் நோயின் அச்சுறுத்தல் இருந்தாலும் தற்போது அந்நாட்டின் மக்கள் பட்டினியில் இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்