அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவது மனிதத்தன்மையற்றது!ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்
ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்,அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவது மனிதத்தன்மையற்றது என்று தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் இருந்து அகதிகளாக வருபவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்றதாகக் கூறி கைது செய்யப்படுகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களின் குழந்தைகள் அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு ஆதரவற்றவர்களாகக் கருதப்பட்டு அடைத்து வைக்கப்படுகின்றனர். கடந்த இரு மாதங்களில் 1940 அகதிகளிடம் இருந்து 1995 குழந்தைகள் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளனர். பெற்றோரிடம் இருந்து குழந்தகள் பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் சையத் ரா அத் அல் உசேன் ((Zeid Ra’ad Al Hussein)) டொனால்டு டிரம்ப் அரசு இந்த நடைமுறையைக் கைவிட வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.