உலக கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங் தனது ஓய்வை அறிவித்தார்

Default Image

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் 80 பந்திற்கு 84 ரன்கள் குவித்தார். கடைசியாக 2012-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடினர். மேலும் 2017-ம் ஆண்டு கடைசியாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளை யாடினார்.
இந்திய அணிக்காக இதுவரை 304 ஒருநாள் போட்டிகள் , 40 டெஸ்ட் போட்டிகள், 20 ஓவர் போட்டிகளில் 58 முறையும்  விளையாடி உள்ளார்.2011-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில்  தொடர் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.ஓய்வு அறிவிப்பில் பேசிய யுவராஜ், கிரிக்கெட் தனக்கு அதிகமாக கற்று கொடுத்ததாகவும் மேலும் போராடவும் கற்றுக்கொடுத்து உள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் 2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியது எனக்கு சிறப்பான அனுபவமாக இருந்தது எனவும் கூறினார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்