வலிமை அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா.!!

Default Image

வலிமை படத்தில் அம்மா பாசத்தை போற்றும் சென்டிமெண்ட் பாடல் ஒன்று உள்ளது என யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். 

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை.வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இந்த வலிமை படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் 10 நாட்கள் மட்டும் மீதமுள்ள நிலையில், விரைவில் படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து மாநாடு படத்தின் புரமோஷனுக்காக ட்வீட்டர் கிளப் அவுஸ் வந்த யுவன் ஷங்கர் ராஜாவிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு வலிமை அப்டேட் அவர் கொடுத்துள்ளார். இது குறித்து யுவன் கூறியது “வலிமை” படத்தில் அம்மா பாசத்தை போற்றும் சென்டிமெண்ட் பாடல் ஒன்று உள்ளது. அப்பாடலை வித்தியாசமக அமைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்