வரலாற்றில் இன்று924.03.2020)… இளவேனிற் கால வரவேற்பான யுகாதி தினம் இன்று…
உகாதி பண்டிகை என்பது ‘யுகாதி’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானதுஆகும். இதில், ‘யுக்’ என்றால் வயது என்றும் ‘ஆதி’ என்றால் ஆரம்பம் என்றும் பொருள். உகாதி என்பது ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் ஆகிய பகுதிகளில் புது வருடப்பிறப்பாக மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை வரலாறு:
இந்து புராணங்களின் படி, இந்த நாளில் தான் தன் பிரம்ம தேவன் படைத்தல் தொழிலை தொடங்கினாராம். அதனால் தான் உகாதி பண்டிகையை தெற்கு இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உகாதி என்பது இளவேனிற் கால வருகையை வரவேற்க்கும் தினமாக விளங்குகிறது. இக்காலத்தில் மரங்களில் பூக்களும் பழங்களும் மீண்டும் துளிர்வதால், புது வாழ்க்கையின் ஆரம்பத்தை இது குறிக்கும்.மரபுகளின் படி, பண்டிகை நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே உகாதிக்கான ஏற்பாடுகள் தொடங்கி விடும். பண்டிகை தொடங்குவதற்கு முன்பாகவே வீட்டை துடைத்து சுத்தப்படுத்தும் சடங்கு முறையை பின்பற்ற வேண்டும். மக்கள் இந்ததினத்தை புதுவருட பிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.