மனம் மகிழ்ச்சியடைய கொண்டாடப்படும் யுகாதி பண்டிகை முறைகள்…உங்களுக்காக…

Default Image

இளவேனிற் காலத்தை வரவேற்கும் விதமாகவும், புது வருடமாக கொண்டாடப்படும் யுகாதி தினத்தன்று, யுகாதி பச்சடி என்ற சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவை அடங்கும்

யுகாதி பச்சடி:

  • இனிப்பு,
  • கார்ப்பு,
  • கசப்பு,
  • புளிப்பு,
  • உவர்ப்பு மற்றும்
  • துவர்ப்பு.
  • இதனை தயாரிக்க இவைகள் பயன்படுத்தப்படும் 

இவைகள் சேர்க்கப்பட காரணம்:

  • வெல்லம் (இனிப்பு) சந்தோஷத்தை குறிக்கும்,
  • உப்பு (உவர்ப்பு) வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும்,
  • வேப்பம் பூக்கள் (கசப்பு) வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும்,
  • புளி (புளிப்பு) சவாலான தருணங்களை குறிக்கும்,
  • மாங்காய் துண்டுகள் (துவர்ப்பு) புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங்களை குறிக்கும்,
  • கடைசியாக மிளகாய் பொடி (கார்ப்பு) கோபம் ஏற்படுத்தும் வாழ்க்கையின் தருணங்களை குறிக்கும்.
  • சந்தோஷமாக வாழ்ந்திட, வாழ்க்கையின் இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே இந்த பச்சடி.

வீட்டில் செய்யப்படும் ஏற்பாடுகள்:

பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையில் குளித்து விடுவார்கள். அதன் பின் வீட்டின் முகப்பை மாவிலைகளால் அலங்கரிப்பார்கள். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் புதல்வர்களுக்கான விநாயகருக்கும் முருகனுக்கும் மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்று நம்பப்படுகிறது. அதனால் மாவிலைகளை வாயில்களில் கட்டினால், நல்ல தானியங்களை அளித்து குடும்ப நலனை அவர்கள் காப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
யுகாதி தினத்தன்று இலக்கியம் சார்ந்த கூட்டங்களும் நடைபெறும். இதில் கவிதைகள் படித்து, இலக்கியம் சார்ந்த விவாதங்களும் நடைபெறும். மேலும் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, பல விதமான சுவைமிக்க சைவ உணவுகளை சமைத்து போடுவதும் ஒரு வழக்கமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்