11 மில்லியன் பேரை கொண்ட பிரபல யூடுபர் ‘King of Random’ மரணம் :இரங்கல் தெரிவித்த யூடுப்

Default Image

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடுபர் கிராண்ட் தாம்சன்  மரணம்.

அமெரிக்காவை சேர்ந்த 38 வயதான கிராண்ட் தாம்சன் இவர் ” தி கிங் ஆஃப் ரேண்டம் ” என்ற யூடூப் சேனலை  ஒன்றை நடத்தி வந்தார் . இந்த சேனலை 11 மில்லியன் அதாவது 1 கோடிக்கு அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.

மிகவும் ஆபத்தான பரிசோதனைகளை செய்து காட்டுவதில் இவர்கள் சேனல் பிரபலம் .வாயு நைட்ரோஜனை தனது முகத்தில் செலுத்தி என்ன செய்கிறது என பாருங்கள் என்ற வீடியோ மிக பிரபலம் .இதனால் உலகளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்  கிராண்ட் தாம்சன்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பராகிளைடிங் மூலம் பறந்து வீடியோ எடுக்க திட்டமிட்டார் அவர் தனது பயணத்தை தொடங்கிய பொழுது சிறிது நேரத்திற்கு பிறகு அவருடான தொடர்பு துண்டிக்கப்பட்டது .இதனால் மிகுந்த அச்சம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவர் உடலில் இருந்த ஜிபிஸ் கருவியின் மூலம் தேடினர்.

இறுதியில் அவர் வைத்திருந்த ஜிபிஸ் உட்டா என்ற இடைத்தருகில் காட்டியது அங்கு அவர் விபத்தினால் உரியிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து தி கிங் ஆஃப் ரேண்டம்   அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் அவர் இறந்ததை பதிவிட்டுள்ளனர் .

யூடுப் நிறுவனமும் தனது ட்விட்டர் பக்கத்தில் கிராண்ட் தாம்சன் மறைவுக்கு அவர் அற்புதமான படைப்பாளர் அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர்க்கும் , ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்