உலக முழுவதும் திடீரென முடங்கிய “YouTube” தற்போதய நிலை என்ன.?

Default Image

கூகிளுக்குச் சொந்தமான யூடியூப், உலகளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு மணிநேரம் முடங்கியது. இதனால், பயனர்களால் யூடியூப் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை உபயோகிக்க முடியவில்லை.

இதனை, ஏதோ நடக்கிறது என்று YouTube தனது டிவிட்டர் பக்கத்தில் 7:23 இல் உறுதிப்படுத்தியது.

பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் நாள்தோறும் அப்லோட் செய்யப்படும் மிகப்பெரிய வீடியோ தளமாக யூடியூப் இருக்கிறது. இதில், அப்லோட் செய்யப்படும் வீடியோக்களுக்கு பார்வைகளை பொறுத்து வருவாய் ஈட்டும் வசதியும் உள்ளதால், பெரும்பாலான வீடியோ மேக்கர்ஸ் யூடியூப்பை நம்பியுள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை யூடியூப் தளம் முடங்கியது. கணினி, மொபைல் என எந்த கருவிகளிலும் யூடியூப் இயங்காததால், பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர். யூடியூப் சேவை முடக்கத்தை அடுத்து, ட்விட்டரில் #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது.

இதனிடையே, யூடியூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கோளாறுகளை சரி செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தது. இதன் பின், சிறிது நேரத்தில் வழக்கம் போல் யூடியூப் இயங்க ஆரம்பித்தது.

தற்போது, அந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டதாகவும், உங்களுக்கு இன்னும் பிரச்சனை இந்தால் உங்களது “கேச் மற்றும் கூகுள் ஹிஸ்ட்ரியை” அழிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்