சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ள படத்தில் யூடுயூப் பிரபலமான கோடங்கி வடிவேல் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.ஆனால் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்களை தேடி கொடுத்தது என்று கூறலாம் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு பல ரசிகர்களின் அன்பையும்,அதே நேரத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.
இந்த நிலையில் பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் கமிட்டான முதல் திரைப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தான் .இதனை அறிமுக இயக்குனரான அரிசில் மூர்த்தி இயக்குகிறார்.கிரிஷ் என்பவர் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் ரம்யா பாண்டியனுடன் வாணி போஜன், மித்துன் மாணிக்கம் ஆகியோர் நடிக்கவுள்ளனர் . நேற்று பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தில் யூடுயூப் பிரபலம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
யூடுயூபில் திரைப்படங்களை நகைச்சுவை வடிவில் விமர்சனம் செய்வர் கோடங்கி வடிவேல் .தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் கவர்ந்த இவர் தற்போது ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ள புது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…