வீடியோ வெளியிட்டதால் ட்ரம்புக்கு எதிராக யூடியூப் நிறுவனமும் நடவடிக்கை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டதால் ஒரு வாரத்திற்கு ட்ரம்பின் Donald j.Trump என்ற சேனலுக்கு யூடியூப் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதற்கு முன் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனம் ட்ரம்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்ய கடந்த 7-ம் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாராளுமன்றத்தில் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
வன்முறையை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சமபவத்திற்கு வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வீடியோவை அதிபர் டொனால்டு வெளியிட்டதால் டிரம்ப் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)