இளைஞர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.! சூப்பர் ஸ்டார் அறிவுரை.!
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படம் வெளியானால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்ட தவறியதே இல்லை. அந்த வகையில், டாணாக்காரன், டான் ஆகிய படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு கால் செய்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் மாதவன் இயக்கியுள்ள ” ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” படத்தை பார்த்துவிட்டு ட்வீட்டர் பக்கத்தில் ரஜினி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டரில் கூறியிருப்பது ” ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் கட்டாயம்
பார்க்க வேண்டும் – குறிப்பாக இளைஞர்கள்.
நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத்தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன்.
இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்” என தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
@ActorMadhavan #Rocketry pic.twitter.com/bmQpoY7fsR
— Rajinikanth (@rajinikanth) July 4, 2022