ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கார் ஏற்றி கொன்ற இளைஞர் கைது!

Default Image

மத வெறுப்புணர்வு காரணமாக சாலையில் நடந்து சென்ற குடும்பத்தினர் மீது காரை ஏற்றி கொலை.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. 

கனடாவில் உள்ள ஆண்ட்ரினோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அந்த சாலையில் வேகமாக வந்த கார் திடீரென அந்த குடும்பத்தின் மீது கண்மூடித்தனமாக மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த குடும்பத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகள் சோதனை செய்ததில் காரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பி உள்ளார். மேலும் காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர் தப்பித்த நபரை தேடும் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் காரை ஓட்டி  ஏற்படுத்திய இருபது வயது கொண்ட நபரை 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து காவலர்கள் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என  தெரிய வந்துள்ளது. மேலும், அந்த குடும்பத்தினர் முஸ்லிம் குடும்பத்தினர் என்பதால் அவர்கள் மீதான மத வெறுப்புணர்வு காரணமாக தான் அந்த இளைஞன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்