உங்கள் குரல் மீண்டும் ஒலித்திட வேண்டும் அன்னைய்யா.! SPB-க்காக உலகநாயகனின் உருக்கமான பதிவு.!

உங்கள் குரல் மீண்டும் ஒலித்திட வேண்டும், மீண்டும் வாருங்கள் என்று உலகநாயகன் கமல்ஹாசன் எஸ். பி. பாலசுப்பிரமணியமிற்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து காய்ச்சல் குறைந்ததாகவும், இரண்டு தினங்களில் வீடு திரும்பி விடுவேன் என்று கூறிய அவருக்கு கடந்த 15ம் தேதி உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .
அதனையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் விரைவில் மீண்டு வர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்பிற்குரிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா ????— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2020