வார்த்தைகளால் விவரிக்க முடியாதது உங்கள் அன்பு.! ட்விட்டரில் யுவன் நெகிழ்ச்சி.!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் இசையமைப்பாளர் யுவன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஓருவர் யுவன் சங்கர் ராஜா. ஒரு ஹீரோவுக்கு இணையான ரசிகர்களை கொண்டே ஒரே இசையமைப்பாளர் என்றே இவரை கூறலாம். இவர் நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரை விட அவரின் வெறித்தனமான இசை ரசிகர்கள் இணையத்தில் யுவனின் பிறந்தநாளை கொண்டாடி தீர்த்துவிட்டார்.
ட்விட்டரில் HBDBelovedYUVAN என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்கள் மட்டுமின்றி, யுவானின் பிறந்தநாளுக்கு பல திரைபிரபலங்கள் தங்கள் அன்பை வாழ்த்து மூலம் பதிவிட்டனர்.
இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்விட்டர் பக்கத்தில் ” “என் பிறந்தநாளில் ,வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் அளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் போதாது.நான் உங்கள் அன்புக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.” என பதிவிட்டுள்ளார்.
Words are not enough to express my gratitude to each one of you for the wishes and blessing showered on my birthday.I am forever grateful and bounded by your love. ❤️ ❤️ ❤️
— Raja yuvan (@thisisysr) September 1, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025