உங்கள் சிறு பிள்ளைக்கு ரொம்ப கோபம் வருகிறதா?
குழந்தைகள் விளையாடும்போதும் அல்லது பள்ளிக்கு செல்லும்போதும் கோவப்படுகிறதா.
அந்த கோபம் எப்படியெல்லாம் உண்டாகிறது தெரியுமா.
குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் அடித்து கொள்வதும் கோபம் கொள்வதும் வழக்கம். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கித் கொடுக்காமல் இருந்தால் கோபம் அடைவார்கள்.சில சமயங்களில் குழந்தைகள் அதிக கோபம் மற்றும் பிடிவாத தண்மை காரணமாக பெற்றோரிடம் அல்லது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம்.
பொதுவாக இதெல்லாம் அனைத்தும் குழந்தைகளும் வளரும் பருவத்திலேயே உருவாகிறது. உங்கள் குழந்தை ஒரு சில சமயங்களில் கோபம் கொள்வது சாதாரணமான விஷயம். ஆனால் அடிக்கடி கோபம் கொள்வதும் மன உளைச்சல் அடைவதும் இருந்தால் உங்கள் குழந்தையிடம் அதை சரி செய்ய வேண்டிய ஒரு விஷயமாகவும்.
குழந்தைகளின் கோபம் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டால் அது அவர்களது வருங்காலத்தில் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்க முடியும். முதலாவதாக உங்கள் குழந்தைகள் தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பது குழந்தைகள் 2 முதல் 3 வயதில் கோபத்தை வெளிப்படுத்த அவர்களது கால்களை வைத்து உதைத்துக் கொண்டு அழுவார்கள்.
சிறு வயது குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது அந்த குழந்தைக்கு தேவையில்லாத உணர்வு ரீதியான இடங்களில் உண்டாகும் போது அதே அளவிற்கு பிடிவாதம் இருக்கக்கூடாது. குழந்தைகள் பேசத் தொடங்கி பள்ளிக்கு செல்லும் போது அவர்களின் பிடிவாதத்தின் அளவும் அழுதலும் குறைய வேண்டும். அதனால் உங்கள் குழந்தைகளின் நடத்தலில் கவனமாக இருந்து அவர்களின் பிடிவாதத்தை கட்டுப்படுத்த சில வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
இதையெல்லாம் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு கோபத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தை உங்களது பேச்சைக் கேட்கவில்லை என்றால் குழந்தையின் கோபத்தை தட்டிவிட்டு குழந்தை நிபுணரிடம் குழந்தையை அழைத்துச் செல்லலாம்.