உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார்.! இயக்குனர் வசந்துக்கு சூர்யா நன்றி .!

Default Image

உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார் என்று கூறி இயக்குனர் வசந்துக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார் .மேலும் ஊர்வசி , கருணாஸ்,காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் . திரையரங்குகளில் பார்க்க எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஓடிடியில் இன்று கண்டு கழிக்கின்றனர்.

படத்தை பார்த்த அனைவரும் சூர்யா அருமையாக நடித்திருப்பதாகவும்,இதுவரை பார்க்காத சூர்யாவை திரையில் பார்க்க முடிந்ததாகவும் பாராட்டி வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் , வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.பலர் படத்தை பார்த்து விட்டு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் .

அந்த வகையில் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சூர்யாவை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் வஸந்த் பாராட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில்”அன்புள்ள சூர்யாவுக்கு,இந்தப் பாராட்டுக் கடிதம் உனக்கு இல்லை, நெடுமாறன் ராஜாங்கத்திற்கு. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை உன் ஆட்சிதான். காட்சிக்கு காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய்!

தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இதுதான் உன் உச்சம்’ இப்போதைக்கு!! நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை, ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.

முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்தத் தீவிரத் தன்மை, அதைச் சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிகிறது. கணல் மணக்கும் பூக்களாக… ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்துக்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.

உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன் “HATS OFF TO YOU MY DEAR SURIYA”. என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும். ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ. எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது. உச்சி முகந்து மகிழ்கிறேன்” என்று கூறி பாராட்டியாருந்தார் .இதற்கு சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.அதில் உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார்..!!!
நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! ரொம்ப ரொம்ப நன்றி சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்