இளம் ராப் பாடகர் விமனநிலையத்தில் மரணம்..!

Published by
murugan
  • சிகாகோவில் உள்ள மிட்வே விமான நிலையத்தில் இறங்கியபோது  திடீரென வலிப்பு ஏற்பட்டது.
  • முதலுதவி கொடுக்கப்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான ராப் பாடகர் ஜரத் அந்தோணி ஹிக்கின்ஸ். இவரை ரசிகர்கள் “ஜூஸ் வேர்ல்ட்” என்று அழைக்கப்படுவார். இவர் அதிகமாக இறப்பு மற்றும் போதைப்பொருள் ஆகியவற்றை மையமாக வைத்து பாடிய ராப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை.  இதனால்  இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜரத் அந்தோணி கலிபோர்னியாவில் இருந்து சிகாகோவுக்கு விமானத்தில் சென்று உள்ளார்.அப்போது சிகாகோவில் உள்ள மிட்வே விமான நிலையத்தில் இறங்கியபோது  திடீரென வலிப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி கொடுத்தனர். பின்னர் ஜரத் அந்தோணியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

வலிப்பு வந்த பின் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதால் தான் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இவரின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தில் ஏற்படுத்தி உள்ளது.

Published by
murugan

Recent Posts

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…

6 minutes ago

‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.!

சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…

14 minutes ago

தவெக ஆர்ப்பாட்டம்: “இஸ்லாமியர்களுக்கு விஜய் உறுதுணையாக இருப்பார்” – ஆனந்த்.!

சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

45 minutes ago

பார்க்கிங் செய்வதில் தகராறு… கண்கலங்கிய பிக்பாஸ் தர்ஷன்.! நடந்தது என்ன?

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…

46 minutes ago

தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு – சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு.!

சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…

1 hour ago

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1280 குறைந்த தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து…

2 hours ago