81 வயது பாட்டியை திருமணம் செய்த இளைஞன் ! கடுமையான சட்டத்தில் இருந்து தப்பிக்க இப்படி செஞ்சிடாரே !
உலகத்தில் இருக்கும் பல நாடுகளில் ஒவ்வொரு வகையான சட்டத்தை பின்பற்றி வருகிறார்கள்.இந்நிலையில் அந்த சட்டத்திற்கு ஏற்றவாறு மக்களும் அதை பின்பற்றி வருகிறார்கள்.
அந்தவகையில் உக்ரன் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இராணுவத்தில் சேர்ந்து கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று அந்நாட்டில் ஒரு கடுமையான சட்டம் இருக்கிறதாம்.இந்நிலையில் அந்த சட்டத்தை அந்நாட்டில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் கடை பிடித்து வருகிறார்கள்.
இதையடுத்து இராணுவத்தில் இருப்பவரின் மனைவி மாற்று திறனாளியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க படுகிறது. இந்த சட்டத்தில் இருந்து தப்பிக்க 24 வயதான இளைஞன் ஒருவர் 81 வயதுடைய அவரது பாட்டியை திருமணம் செய்து கொண்டார்.