இளம் பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் – 44 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு!
ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 20 வயதுடைய ஒரு வாலிபர் நகர் வீதியில் கத்தியுடன் வலம் வந்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து திடீரென அந்த வாலிபர் அந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை தாக்க தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் 24 வயது இளம்பெண் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரிந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் 41 வயதுடைய பெண்ணும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தாக்குதல் நடத்திய அந்த வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்துள்ளது. கொலை செய்தது உண்மை என தற்பொழுது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில் இது குறித்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் மெர்ட் நெய் எனும் அந்த 20 வயது வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வாலிபர் 33 ஆண்டுகளுக்கு பரோலில் கூட வெளியில் வர முடியாது எனவும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது இந்த 20 வயது வாலிபர் தன்னுடைய 53 வயது வரை சிறையில் இருந்து வெளியில் வரமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.