ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்கும் இளம் ஹீரோ.! யார் தெரியுமா.?
இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .மேலும் இந்த படத்தினை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியன்-2 படப்பிடிப்பானது பல நடிகர்கள், கலைஞர்களை கொண்டு படமாக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான அனுமதியை அரசு வழங்கிய பின்னரே ஷூட்டிங் நடைபெற வாய்ப்பு உள்ளது.அதற்கிடையில் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக பல நடிகர்களை வைத்து பான் இந்தியன் படத்தினை உருவாக்கவுள்ளதாகவும்,அதில் யாஷ் , விஜய் சேதுபதி மற்றும் பல தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இவர் அடுத்ததாக இளம் ஹீரோ ஒருவரை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும்,கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவன தயாரிப்பாளரான கோட்டாபாடி ராஜேஷ் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் ஷங்கரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.துருவ் விக்ரம் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து விக்ரம் 60 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.