இரண்டு கைகள் இல்லாமல் விமானம் , கார் ஒட்டும் அமெரிக்கா இளம் பெண்
அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசேனாவை சார்ந்த 30 வயதுபெண் ஒருவர் விமானம் ஓட்டுகிறார். அதில் என்ன ஆச்சரியம் என்று கேட்டால் அந்த பெண்ணுக்கு இரண்டு கைகள் இல்லாமல் தனது கால்கள் மூலம் விமானத்தை ஒட்டி வருகிறார்.
அரிசேனாவை சார்ந்த ஜெஸ்ஸிக்கா கோக்ஸ். பிறக்கும் போதே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக அவரது தாய் மிகுந்த வேதனை அடைந்தார். ஆனால் ஜெஸ்ஸிக்காவின் தாய் அவரை தன்னம்பிக்கை உடனும் , சுதந்திரத்துடனும் வளர்த்து வந்தார்.
ஒருமுறை ஜெஸ்ஸிக்காவிற்கு விமானத்தில் விமானி அருகில் அமர்ந்து பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.அன்று முதல் விமானத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.இதனால் தனது மேல் படிப்பை முடித்த பிறகு விமான பயிற்சியில் ஈடுபட்டார். இரண்டு கைகள் இல்லாமல் ஜெஸ்ஸிக்கா கடும் பயிற்சிக்கு பிறகு 2008-ம் ஆண்டு லைட் ஸ்போர்ட் விமானத்தை இயக்குவதற்கான சான்றிதழ் பெற்றார்.
ஜெஸ்ஸிக்கா விமானம் மட்டும் ஓட்டுவதில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. சிறந்த பேச்சாளராகவும் வலம் வருகிறார்.இவர் பல மேடைகளில் தனது தன்னம்பிக்கை பேச்சால் பலருக்கு ஊக்கம் அளித்து வருகிறார்.
மேலும் ஜெஸ்ஸிக்காக கார் ஓட்டுதல்,சமையல் கராத்தே என பல துறைகளில் ஒரு ஆல்ரவுண்டர் போல வலம் வருகிறார்.இது குறித்து ஜெஸ்ஸிக்காக கூறுகையில், “என்வாழ்கை முற்றிலும் மாறுபட்டது. என் வாழக்கையை என் போக்கில் வாழ நினைத்தேன். எனக்கு பல பேர் முன் உதாரணமாக உள்ளார்கள். ஆனால் வரும் தலைமுறைக்கு நானே முன்உதாரணம் “எனகூறினார்.