தொடர்ந்து நடித்ததால் இளம் நடிகைக்கு மாரடைப்பு..!மருத்துவமனையில் அனுமதி..!
நடிகை கெஹானா வசிஸ்த் தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.இவர் தமிழில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான “பேய்கள் ஜாக்கிரதை” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
தற்போது இவர் ஒரு வெப் சீரியலில் நடித்து வருகிறார்.சரியாக சாப்பிடாமல் 48 மணிநேரம் தொடர்ந்து நடித்து கொண்டு இருந்த காரணத்தால் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது உள்ளது.
இதைத்தொடர்ந்து கெஹானா வசிஸ்த்தை நேற்று முன்தினம் மும்பையில் உள்ள ரக்ஷா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்கரை நோய் இருப்பதாகவும் ,உடலில் அதிக அளவில் சக்கரை உள்ளதாகவும் கூறினார்.
அதே நேரத்தில் அவருடைய பிபி மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து மூச்சுவிடுவதில் பிரச்சனை இருப்பதால் சுவாச குழாய் பொருத்தப்பட்டு அவர் தீவிர சிகிக்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருகிறார்.