தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார் – நடிகர் சூர்யா..!!

தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார் என்று தனது இரங்கலை சூர்யா தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா காலை நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தியுடன் நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தினர். “இதனை தொடர்ந்து சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார். மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார்…
மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்…#RIPViveksir pic.twitter.com/nc0Dl8aC7o— Suriya Sivakumar (@Suriya_offl) April 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025