இனிமே நீங்களும் சம்பாதிக்கலாம்! கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கூகுள் என்பது இன்று ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தேடலுக்கான சிறந்த இணையதளமாக மாறி உள்ளது. கூகுள் பல விடையறியா கேள்விகளுக்கு பலருக்கு பதிலாகவும் உள்ளது. இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அவர்கள் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின்படி, உலகம் முழுவதும் இருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இலவசமாக விளம்பரம் செய்யலாம். இத்திட்டமானது அக்டோபர் நடுப்பகுதியில், தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கூகுள் நியூஸ் ஷோகேஸ் அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும், முதலில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் பல்வேறு நாடுகளில் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Proud to announce our biggest commitment to the future of news yet: the launch of Google News Showcase – a new kind of news experience for publishers and readers – along with a $1 billion global investment in partnerships with publishers. https://t.co/zdCHuawyAp
— Sundar Pichai (@sundarpichai) October 1, 2020