என் தகுதி என்ன என்பதை நீங்கள் தீர்மானிக்க கூடாது என நடிகர் புகழ் ட்வீட் செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்யில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
தற்போது புகழ் அஜித்துடன் வலிமை, அருண் விஜய்யுடன் யானை, சந்தானத்துடன் சபாபதி விஜய்சேதுபதியுடன் ஒரு திரைப்படம், சிம்புவின் மாநாடு, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதை தவிர்த்து மேலும் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதைப்போல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில முக்கிய நிகழ்ச்சிகளிலும் புகழ் படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் ரசிகர்கள் புகழின் காமெடியை பார்க்கமுடியததால் அவர் எப்போது வருவார் என எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இந்நிலையில், புகழ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கடலில் நின்றுகொண்டவாறு ஒரு புகைப்படம் எடுத்து அதில் “தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது என்பது உண்மை தான்… ஆனால் என் தகுதி என்ன என்பதை நீங்கள் தீர்மானிக்க கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…