தூங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை செய்ய வேண்டும், இல்லையேல் பலவித பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பல பேருக்கு தூக்கம் வருவது என்பதே பெரிய பாதிப்பாக தான் தற்பொழுது இருக்கிறது. சிலருக்கு வரம் போல் நினைத்த நேரத்தில் தூங்கி விடுவார்கள். பலர் தூக்கம் வராமல் பலவற்றையும் சிந்தித்து நேரத்தை கழிப்பர். தூக்கம் வருவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் பல வித யோசனைகளிலேயே இரவு நேரம் சென்று விடும். சில நேரத்தில் நாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் சண்டை போட கூடாது என்று நினைத்திருப்போம். ஆனால், நம்மை அறியாமல் சண்டை போடும் சூழ்நிலையை நாமே உருவாக்கிவிடுவோம்.
இதுபோல் பலவிதமாக நாம் ஒன்று நினைக்கவும், அது தானாக வேறு ஒன்றாகவும் நடக்கும். இது போன்று உங்களுக்கு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்றால் உங்களை எதிர்மறை சக்திகள் சூழ்ந்துள்ளது என்று அர்த்தம். வீட்டில் இருக்கும்பொழுது தெய்வ சக்திகள் நிறைந்து இருப்பதால் எவ்வித தீங்கும் நேராது. இதே வெளியே சென்றோம் என்றால் நம்மை எதிர்மறை சக்திகள் சூழ அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் நாம் நமது நிம்மதியையும் தூக்கத்தையும் இழக்க நேரிடும். இதிலிருந்து விடுபட முக்கியமாக நாம் செய்ய வேண்டிய ஒன்று, வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் மீண்டும் வீட்டிற்குள் நுழைகிறீர்கள் என்றால் நிச்சயமாக கை, கால், முகம் கழுவிய பின்னரே நுழைய வேண்டும்.
அதுவரை எதனையும் தொடாமல் இருப்பது சிறந்தது. இதன் காரணம், வெளியே இருக்கும் துர்சக்திகள் நமது பின்னங்கால் வழியாக தான் நம்மிடம் நுழையும் என்பதால் புறங்கால்களை முன்னோர்கள் கழுவ கூறியிருக்கிறார்கள். நாம் இவ்வாறு கை, கால், முகம் கழுவிய பின்னர் வீட்டிற்குள் நுழைய வேண்டும். அதேபோல் தூங்குவதற்கு முன் இப்படி சுத்தமாக கை, கால், முகம் கழுவிய பின்னர் தூங்குவது சிறந்தது. இவ்வாறு இருக்கும் பொழுது நம்மிடம் நேர்மறை சக்திகள் அதிமாக இருக்கும். அதேபோல் தூக்கமும் வரும்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…