நீங்கள் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும்.! எடப்பாடியாருக்கு பவன்கல்யாணின் பிறந்தநாள் வாழ்த்து.!

பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பிரதமரும், குடியரசுத் தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஐயா வணக்கம், புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதாவின் நல்லாட்சியை தொடர்ந்து நடத்தி வரும் நீங்கள் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடத்துள்ளீர்கள். அ. தி. மு. க. வின் தொண்டனாக தங்களின் வாழ்க்கையை தொடங்கி பல பொறுப்புகளை வகித்துள்ளீர்கள். குறிப்பாக நான்கு முறை சட்ட மன்றத்திற்கும், ஒருமுறை பாராளுமன்றத்திற்கும் தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளீர்கள். இன்று தமிழக முதல்வராக ஏழை எளிய மக்கள் குறிப்பாக விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறீர்கள்.
உங்களின் இந்த பிறந்தநாளில் என்றும் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும் என்று என்னுடைய ஜனசேனா கட்சியின் சார்பாக வாழ்த்துகிறேன் என்று என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஊரடங்கு காரணமாக ஆந்திரா மீனவர்கள் சென்னை துறைமுகத்தில் சிக்கி தவித்த போது, அவர்களுக்கு போதிய உணவும், பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி பவன்கல்யாண் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்க, எடப்பாடி பழனிசாமி அவர்களும் அதை உடனடியாக நிறைவேற்றி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
*தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!* ????@CMOTamilNadu pic.twitter.com/Ij2h60KGpG
— Pawan Kalyan (@PawanKalyan) May 12, 2020