கொரோனாவிற்கான முறையான மருந்து கிடைக்காமல் கூட போகலாம் – WHO எச்சரிக்கை!
கொரோனாவிற்கு சரியான மருந்து ஒருபோதும் கிடைக்காமல் கூட போகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ரெட் ரோஸ் அவர்கள் கூறியுள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகள் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன. சில நாடுகள் தங்களது சோதனைகள் வெற்றி அடைந்துள்ளதாகவும் கூறிவருகின்றன. இந்நிலையில் அதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும், தற்போது வெற்றிகரமான மருந்து தற்போதைக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ரெட் ரோஸ் அவர்கள் கூறுகையில், பல தடுப்பூசிகள் தற்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருந்தாலும் பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்குவார்கள் என்று நம்புகிறோம். இருந்தாலும் 100% வெற்றிகரமாக குணப்படுத்த கூடிய மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. மக்கள் தான் சமூக இடைவெளியை பின்பற்றுதல், சமூகத்திற்கு தொற்று குறித்து புரிதலை எற்படுத்துதல், பரவலை கட்டுப்படுத்த அரசு உரிய அதிகாரம் அளித்தல், முகமூடி அணிதல்,, தவறாமல் கைகளை சுத்தம் செய்வது மற்றும் மற்றவர்களின் இருமல் பிறருக்கு பராமவல் தடுத்த போன்றவற்றை செய்ய வேண்டும் என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.