உலக நாயகனுக்கு பதிலாக மக்கள் செல்வன் நடிக்க போகும் படம் என்ன தெரியுமா.!
நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இந்தியன் 2 பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியதன் காரணமாக லைகா நிறுவனம் இந்த படத்திலிருந்து விலகியதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. அது மட்டுமின்றி கமல் இயக்கி நடிக்கவிருக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருந்தது குறிப்பிடத்தக்க து . இந்த படத்தை ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராகவும், வடிவேலு அவர்கள் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தில் கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்ட மிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பாளர் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகியதாகவும், ஆனால் அந்த நேரத்தில் மாஸ்டர் மற்றும் பிற படங்களின் கால்ஷீட் பிரச்சினைகளால் விஜய் சேதுபதியால் நடிக்க இயலவில்லையாம். இதனை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.