பல ஹிட் படங்களை கொடுத்த அட்லியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..!
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லி. அதனை தொடர்ந்து மெர்சல், தெறி போன்ற விஜய்யை வைத்து எடுத்து வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 300கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது . ஆனாலும் இவர் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கும் இயக்குனர் என்று இன்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது
இந்த நிலையில் இவரது அடுத்த படம் ஷாருக்கான் அவர்களை வைத்து என்று கிசுக்கிசுக்கப்பட்டது. அதனையடுத்து தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் அவர்களுடன் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது வரை யாருடனும் கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது.
எல்லாரிடமும் பேச்சுவார்த்தை மட்டுமே நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. பிகில் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்த படத்தினை குறித்த எந்த விவரமும் இல்லையே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.